பொய் விளம்பரங்கள்: ஆயுர்வேத மருந்து உற்பத்தி உரிமங்கள் தற்காலிக ரத்து

1 mins read
d1d3b339-98cc-4c1a-ae7a-25cf7c37d760
விதிமுறைகளுக்கு உட்படாமல் விளம்பரங்களை வெளியிட்டதாக பாபா ராம்தேவை இந்திய உச்ச நீதிமன்றம் சாடியது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான ஆயுர்வேத நிறுவனங்கள் அவற்றின் மருந்துகள் குறித்து பொய் விளம்பரங்கள் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், மக்களுக்குத் தவறான கருத்துகளைக் கொண்டு சேர்த்த விளம்பரங்கள் காரணமாக பாபா ராம்தேவுக்குச் சொந்தமான நிறுவனங்கள் 14 ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் ஆஸ்துமா, நீரிழிவுநோய், மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான உரிமங்களும் அடங்கும்.

இது பாபா ராம்தேவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

விதிமுறைகளுக்கு உட்படாமல் விளம்பரங்களை வெளியிட்டதாக பாபா ராம்தேவை இந்திய உச்ச நீதிமன்றம் சாடியது.

இந்த விவகாரம் குறித்து பாபா ராம்தேவ் உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்