கன்னடத் தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம், ஞாயிற்றுக்கிழமை (மே 12) நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு வயது 35. இவரது திடீர் மரணம் தொலைக்காட்சித் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலம், மஹ்புப்நகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்தது.
பவித்ரா இருந்த வாகனம், சாலைத் தடுப்பின் மீதும் ஆர்டிசி பேருந்து ஒன்றுடனும் மோதிக்கொண்டது. விபத்தில் பவித்ரா உயிரிழந்தாலும், இவருடைய குடும்பத்தாரும் வாகன ஓட்டுநரும் காயங்களுடன் உயிர்தப்பினர்.
பவித்ரா கர்நாடகாவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது நிகழ்ந்த இந்த விபத்து குறித்த மேல்விரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கன்னடத் தொகைக்காட்சி நாடகங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததற்காக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட பவித்ரா, மற்ற மொழி நாடகங்களில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில், திறன்படைத்த நடிகையான பவித்ரா விபத்தில் உயிரிழந்ததைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ள தொலைக்காட்சித் துறையினர், சமூக ஊடகங்களில் இரங்கல்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.