தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவிரி மேலாண்மை ஆணையம் மே 21ஆம் தேதி கூடுகிறது

1 mins read
2d8a8ab1-a53b-42f5-b6a4-c8b0a3264150
படம்: - இணையம்

புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் மே 21ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது. அன்று பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது.

மே மாதம் தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. காவிரி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக மே 16ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

குறிப்புச் சொற்கள்