மன்னர் சார்லஸ்-ஐ பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷதா மூர்த்தி

1 mins read
8aac2826-dadb-4056-b51d-b96d97d58af1
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் - அக்‌ஷதா தம்பதியர். - கோப்புப்படம்: ஊடகம்

பெங்களூர்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் - அக்‌ஷதா தம்பதியர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 275வது இடத்தில் இருந்து 245வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

இது இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் நாளிதழின் ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இன்போசிஸில் உள்ள அக்‌ஷதாவின் பங்குகள் ஓர் ஆண்டுக்குள் 108.8 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து கிட்டத்தட்ட 590 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்துள்ளதே அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

பிரிட்டன் இளவரசர் சார்லஸின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 600 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. இந்த ஆண்டு 610 மில்லியன் பவுண்டுகளாக ஏற்றம் கண்டுள்ளது.

பிரிட்டனின் பணக்காரக் குடும்பங்களின் வருடாந்திரத் தொகுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்பம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் அவர்களின் சொத்து மதிப்பு 37.196 மில்லியன் பவுண்டுகளை எட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்