லக்னோ: இந்தியாவில் இறுதிக் கட்டத் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது, கடும் வெப்பம் காரணமாக ஒரு மாநிலத்தில் மட்டும் குறைந்தது 33 வாக்குச்சாவடி ஊழியர்கள் உயிரிழந்ததாக உயர் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏழாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்த நிலையில், “33 வாக்குச்சாவடி பணியாளர்கள் வெப்பத் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.
“இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 15 லட்சம் ரூபாய் ($24,000) பண இழப்பீடு வழங்கப்படும்,” என்று வடக்கு மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு நவ்தீப் ரின்வாத் செய்தியாளர்களிடம் கூறினார்.

