தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியப் பங்குச் சந்தை 1,500 ஏற்றம்

1 mins read
ccff647e-db67-42de-baa6-f39a2598af64
முன்னெப்போதும் இல்லாத அளவில் 124.36 பில்லியன் ரூபாய் (S$2 பில்லியன்) இந்தியப் பங்குகள் விற்கப்பட்டன. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இல்லாத சரிவை இந்தியப் பங்குச் சந்தை சந்தித்தது. - படம்: புளூம்பர்க்

மும்பை: ஜூன் 5ஆம் தேதியன்று இந்தியப் பங்குச் சந்தையான சென்செஸ் 1,500 ஏற்றம் கண்டது.

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 500 புள்ளிகள் உயர்ந்தது.

முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திரு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறியது.

இதையடுத்து, ஜூன் 4ஆம் தேதியன்று இந்தியப் பங்குச் சந்தையில் உள்ள தங்கள் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் 124.36 பில்லியன் ரூபாய் (S$2 பில்லியன்) இந்தியப் பங்குகள் விற்கப்பட்டன.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இல்லாத சரிவை இந்தியப் பங்குச் சந்தை ஜூன் 4ஆம் தேதியன்று சந்தித்தது.

தலைமைத்துவ நிலையற்றத்தன்மை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தியப் பங்குச் சந்தை தற்போது மீண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்