அசாமில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐவர் உயிரிழப்பு

அசாமில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐவர் உயிரிழப்பு

1 mins read
d4dfd70f-707e-4b92-91db-231e9eb91937
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் உள்ள நாகோன் மாவட்டத்தில் கம்பூரில் பெய்துவரும் கனமழைக்கு இடையே கிராமவாசி ஒருவர் உணவு தானிய மூட்டையைச் சுமந்துகொண்டு வெள்ளம் சூழ்ந்த சாலை வழியாகச் செல்கிறார். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

கவுகாத்தி: அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. அசாமில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 15 மாவட்டங்களில் 1.61 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 26 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, ஹைலகண்டி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவர் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தார். அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் படர்பூர் பகுதியில் தொடர் மழை காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக கரீம்கஞ்ச் காவல் துறை கண்காணிப்பாளர் பார்த்த ப்ரோதிம் தாஸ் தெரிவித்துள்ளார்.

அசாமில் 15 மாவட்டங்களில் உள்ள 470 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட1378 ஹெக்டர் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 93,835 வீட்டு விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, கடந்த வாரம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், வெள்ளத்தால் வனவிலங்குகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார். காசிரங்காவில் மூன்று புதிய ராணுவப் படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்