மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் சட்டமன்றத்தில் துணை முதல்வரான அஜித் பவார் 2024-25 நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு இலவசத் திட்டங்களை அறிவித்தார்.
21 முதல் 60 வயதுடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும். ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு வருடத்திற்கு 3 சமையல் எரிவாயுக் கலன்கள் இலவசமாக வழங்கப்படும்.
மின்சாரக் கட்டணம் செலுத்தாத 44 லட்சம் விவசாயிகள் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இவை அனைத்தும் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது. இந்த திட்டங்களுக்காக வரவுசெலவுத் திட்டத்தில் 46 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

