தண்ணீர் தேங்கிய பகுதிகளில் படகுகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் மக்கள்

தண்ணீர் தேங்கிய பகுதிகளில் படகுகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் மக்கள்

1 mins read
9fbf2672-d738-4591-8472-ad49e9862526
மொராதாபாத் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால், படகுகளைப் பயன்படுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். - படம்: ஏஎன்ஐ

மொராதாபாத்: கனமழையைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தின் பல பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், மக்கள் படகுகளைப் பயன்படுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மொராதாபாத்தில் உள்ள போலாநாத் காலனியில் வசிப்பவர்கள் நீரில் மூழ்கிய பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்ல படகுகளைப் பயன்படுத்துவதைக் காண முடிந்தது.

தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் நிலவும் சூழல் மிகவும் மோசமாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

“நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நாங்கள் பயணம் செய்ய படகைப் பயன்படுத்துகிறோம். நாங்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சனிக்கிழமைதான் படகு வந்தது. இந்த தண்ணீரில்தான் பயணம் செய்யவேண்டும்,” என்று போலாநாத் காலனியில் வசிக்கும் பப்லு ஏஎன்ஐ ஊடகத்திடம் கூறினார்.

“ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதும் நீரில் மூழ்குவதும் தொடர்கிறது. வடிகால் வசதி இல்லை. இந்தத் தண்ணீரில் நீச்சல் தெரியாதவர்கள் மூழ்கிப் போய்விடலாம்.

“மூன்று நாள்களாக வெளியில் செல்லமுடியாமல் சிக்கிக்கொண்டோம். சனிக்கிழமைதான் படகு வந்தது. இது ஆண்டுதோறும் நடக்கும்” என்று போலாநாத் காலனியில் வசிக்கும் மற்றொருவரான ஜூலி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்