சீன அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர்

சீன அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர்

1 mins read
be9f54b2-fe9b-4d8e-a9ef-b837bcb8f3ec
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் பேசினார். - படம்: சமூக ஊடகம்/ஜெய்சங்கர்

புதுடெல்லி: இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் வெளியுறவு அமைச்சரை சந்திந்த பிறகு திரு ஜெய்சங்கர் அவ்வாறு தெரிவித்தார்.

தற்போது கஜகஸ்தானில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாடு நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற அமைச்சர் ஜெய்சங்கர், மாநாட்டின் இடையே சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் பேசினார். சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் சமூக ஊடகத்திலும் பதிவிட்டார்.

இந்தியா - சீனா இடையே எல்லைப் பகுதிகளில் எஞ்சியுள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. அந்த நோக்கத்துக்காக அரசதந்திர, ராணுவ வழிகள் மூலம் முயற்சிகளை இரட்டிப்பாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்