ஒடிசா தாதிமை இல்லத்தில் தீவிபத்து; 15 பிறந்த குழந்தைகள் வெளியேற்றம்

ஒடிசா தாதிமை இல்லத்தில் தீவிபத்து; 15 பிறந்த குழந்தைகள் வெளியேற்றம்

1 mins read
ebcd9970-11e4-41cf-94bd-814a76b23059
கோப்புப் படம் - பிக்சாபே

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தின் பூரிகாட் காவல்நிலையம் அருகே உள்ள திரிஷா தாதிமை இல்லத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. மின்கசிவு இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முதற்கட்டத் தகவல்களின்படி, எட்டு நோயாளிகளுடன் புதிதாகப் பிறந்த 15 குழந்தைகளையும் தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

“அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புதிதாகப் பிறந்த தீவிர சிகிச்சை வசதி தேவைப்படும் 15 குழந்தைகளுக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

“சுகாதாரத் துறைச் செயலாளரிடம் இதுகுறித்து பேசினேன். தீ முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது. புகையை அகற்றும் முயற்சிகள் நடந்து வருகின்றன,” என்று தீயணைப்புத் துறை அதிகாரி சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.

இதற்கிடையே தீவிபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி உத்தரவிட்டார்.

தாதிமை இல்லத்தில் இருந்து மற்ற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளின் சிகிச்சை செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்