மகாராஷ்டிர ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்: புதுச்சேரிக்கு கைலாசநாதன்

1 mins read
915f7273-e678-460b-badd-212ff4d4c457
சி.பி.ராதாகிருஷ்ணன். - படம்: இந்திய ஊடகம்

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டுள்ளாா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு புதிய ஆளுநா்கள் மற்றும் துணைநிலை ஆளுநரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்துள்ளாா்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜாா்க்கண்ட் ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநா், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பொறுப்பை கூடுதலாகவும் வகித்த சி.பி. ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாவ் கிசான்ராவ் பாக்டே, தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வா்மா, சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்துா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஜாா்க்கண்ட் ஆளுநராக சந்தோஷ்குமாா் கங்வாா், சத்தீஸ்கா் ஆளுநராக ராமன் டேக்கா, மேகாலய ஆளுநராக சி.ஹெச்.விஜயசங்கா் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

பஞ்சாப் ஆளுநராகவும், சண்டீகா் யூனியன் பிரதேச நிா்வாகியாகவும் குலாப் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளாா்.

அசாம் ஆளுநராக லட்சுமண் பிரசாத் ஆச்சாரியா நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு மணிப்பூா் ஆளுநா் பதவியும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர பஞ்சாப் ஆளுநா், சண்டீகா் யூனியன் பிரதேச நிா்வாகி ஆகிய பதவிகளிலிருந்து பன்வாரிலால் புரோஹித் விலகினார். அவரின் பதவி விலகலை அதிபர் திரெளபதி முா்மு ஏற்றுக்கொண்டாா் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்