தாமரை வடிவிலான சக்கர வியூகத்தில் இந்தியா சிக்கிக் கொண்டது: மக்களவையில் ராகுல் காந்தி பரபரப்பு உரை

1 mins read
629b2b53-3d41-4e9f-8eb9-3879f3b807a3
அச்சம் எனும் சக்கரவியூகம் அமைத்து மக்களை மோடி, அமத்‌ ‌ஷா பயமுறுத்தி வருகின்றனர் என்றார் ராகுல் காந்தி.  - படங்கள்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கட்கிழமை மக்களவையில் உரையாற்றினார்.

அப்போது அவர், “சக்கர வியூகத்தில் அபிமன்யூ சிக்கியதைப் போல் நாட்டு மக்கள் பிரதமர் மோடியின் ஆட்சியில் சிக்கியுள்ளனர். பாஜக ஆட்சியில் அமைச்சர்கள் கூட அச்சத்தில் உள்ளனர். நாடு முழுவதும் அனைத்து விஷயங்களிலும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்,” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “நாடு முழுவதும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். இளைஞர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழ்நிலை உள்ளது. தாமரை விடிவில் சக்கரவியூகம் அமைத்து மக்களை அச்சத்தில் வைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

“அச்சம் எனும் சக்கரவியூகத்தை அமைத்து மக்களைப் பயமுறுத்தி வருகின்றனர் மோடி, அமித் ஷா. அவர்களால் அமைக்கப்பட்டுள்ள அந்த வியூகத்தில் நாட்டு மக்கள் சிக்கி உள்ளனர்,” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்