குக்கர் மூடியால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி

குக்கர் மூடியால் தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி

1 mins read
587b9f08-658f-46a3-97c9-79c234cb2889
படம்: - பிக்சாபே

புதுச்சேரி: கஞ்சா கும்பலைப் பிடிக்கச் சென்ற தலைமை காவல் அதிகாரியைக் குக்கர் மூடியால் அடித்துக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கோபாலன்கடை - அம்மா நகரில் இருக்கும் வீடு ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை காவலர் வசந்த் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவலர் வசந்த் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

அப்போது, வீட்டில் இருந்த 3 இளைஞர்கள் விற்பனைக்காக கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக தயார் செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர்களைப் பிடிக்க முயன்றார். அவர்கள் மூவரும் இணைந்து குக்கர் மூடியால் காவலர் வசந்தைக் கடுமையாகத் தாக்கினர்.

மேலும் சாக்குப் பையால் அவரின் முகத்தை மூடி கொலை செய்ய முயற்சி செய்தனர். வில்லியனூர் காவல்துறை அதிகாரிகள் அங்கு வந்ததை கண்டதும் இருவரும் தப்பியோடினர். தப்பியோடிய மூவரில் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். 

குறிப்புச் சொற்கள்