காலையில் திருமணம்; மாலையில் கத்திக்குத்து: மணமகள் மரணம்

1 mins read
f4bda54a-f467-4f60-b1cf-363e98290179
மணக்கோலத்தில் நவீன்குமார், லிகிதாஸ்ரீ. - படம்: இந்திய ஊடகம்

கோலார்: திருமண வாழ்க்கையில் இணைந்த சில மணி நேரங்களிலேயே புதுமணத் தம்பதி ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நவீன்குமார் என்பவருக்கும் லிகிதாஸ்ரீ என்பவருக்கும் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) திருமணம் நடந்தது.

இருதரப்புப் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்த நிலையில் திருமணம் முடிந்ததும் தம்பதியினர் தேநீர் அருந்துவதற்கு உறவினர் வீட்டுக்குச் சென்றனர்.

அங்கு நவீன்குமார் மற்றும் லிகிதா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி அருகில் இருந்த கத்தியை எடுத்து ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டதாகவும் தெரிகிறது.

இந்தக் கத்திக்குத்து சம்பவத்தில் மணமகள் லிகிதாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார். மணமகன் மட்டும் ரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திருமணம் நடந்து முடிந்து ஒரு சில மணி நேரங்களிலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு நிலவியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்