பேருந்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசப் பயணம்

1 mins read
c346e46d-418f-4dc7-a855-a456206f8c0c
பிரசவத்திற்கு உதவிய செவிலியருக்கு ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டது. - படம்: பிக்சாபே

அமராவதி: தெலுங்கானா மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது பேருந்தில் பயணித்த ஒரு செவிலியர் நடத்துனருடன் இணைந்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். அந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் வகையில் இலவச பயண பாஸ் ஒன்றை தெலுங்கானா அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கியுள்ளது.

பிரசவத்திற்கு உதவிய செவிலியருக்கு ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்