தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடுமையாகும் இந்தியக் குடிநுழைவு விதிமுறைகள்

1 mins read
8663ecb9-b86d-44a4-bbb0-481c901b0c94
இந்திய தேசியக் கொடிகள். - கோப்புப் படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் குடிநுழைவுச் சட்டங்களை மேலும் கடுமையாக்கி அதை நடைமுறைப்படுத்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதன்கீழ், அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைவோருக்கு ஐந்து லட்சம் ரூபாய் (7,790 வெள்ளி) வரை அபராதம் விதிக்கப்படலாம்; போலி கடப்பிதழுடன் இந்தியாவுக்குள் வருவோருக்கு 10 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குடிநுழைவு, வெளிநாட்டவர் சட்ட மசோதா 2025 (Immigration and Foreigners Bill 2025) என்பதை தற்போது தொடரும் வரவு செலவு திட்டத்துக்கான நாடாளுமன்ற அமர்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சட்டம், தற்போது நடப்பில் இருக்கும் சம்பந்தப்பட்ட விதிமுறைகளுக்குப் பதிலாக நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட வெளிநாட்டவர், வெளிநாட்டவர் அடிக்கடி சென்றுவரும் இடங்களைக் கையாள்வது, விமானங்கள்  போன்ற பயணிகள் தொடர்பில் சில தகவல்களைத் தெரியப்படுத்துவதைக் கட்டாயமாக்குவதன் தொடர்பில் அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் நோக்குடன் புதிய சட்ட மசோதா அறிமுகம் காணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்