மும்மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மும்மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

1 mins read
79d795b3-70ac-403f-9db0-7e43e6e95f9c
புதிய கல்விக் கொள்கையால் ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயமும் மாணவர்கள் மனநலம் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். - கோப்புப் படம்: தினமணி

புதுடெல்லி: புதிய மொழிகளைக் கற்பது எந்த வகையிலும் வீண் போகாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடப்புக் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ அமல்படுத்தியுள்ள புதிய மும்மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடைவிதிக்கவும் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் சிபிஎஸ்இ அமைப்பு, புதிய மும்மொழிக் கொள்கையை அறிவித்துள்ள நிலையில், அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இதை மறுத்துவிட்டன.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) வந்தது.

இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு இந்திய மொழிகளைக் கற்க வேண்டியுள்ளது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், அம்மாணவர்கள் ஐந்தாம் வகுப்பிலிருந்து படித்து வந்த வெளிநாட்டு மொழியையோ அல்லது ஆங்கிலத்தையோ கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

புதிய கல்விக் கொள்கையால் ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயமும் மாணவர்கள் மனநலம் பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், புதிய மொழியைக் கற்றுக்கொள்வது ஒருபோதும் வீணாகாது என்றார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவர்களை மீண்டும் பணியமர்த்த உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிட முடியும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த புதன்கிழமைக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்