உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் முடக்கம்

உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் முடக்கம்

1 mins read
09b32683-39c8-4afc-b889-efd7ea9a552d
இந்திய உச்ச நீதிமன்றம். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் வலையொளிப் பக்கத்தை இணைய ஊடுருவிகள் முடக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்பக்கத்தில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘ரிப்பல் லேப்ஸ்’ என்ற நிறுவனத்தின் ‘எக்ஸ்ஆர்பி’ மின்னிலக்க நாணயம் தொடர்பான விளம்பரக் காணொளிகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

பொதுநலன் சார்ந்த, முக்கிய வழக்குகளின் விசாரணை நேரடியாக அப்பக்கம் வழியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில், அப்பக்கம் ஊடுருவப்பட்டுள்ளது நீதித்துறை பயன்படுத்தி வரும் இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்த அக்கறைகளை எழுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்