புதுடெல்லி: டெல்லியில் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு, தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் ஈடுபடுத்துமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கக் கல்வி நிறுவனங்களிலிருந்து உரிய அதிகாரிகளை நியமிக்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி அரசின் இந்த உத்தரவிற்கு ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கல்வி சாராத பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்துவது மாணவர்களின் கல்வியை பாதித்து, ஆசிரியர் தொழிலின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் தெருநாய் கணக்கெடுப்புக்கு ஆசிரியர்களை நியமிக்கும் இதே போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆசிரியர்களுக்கு நாய் கணக்கெடுப்புப் பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

