ஹைதராபாத்: களவுபோன அல்லது தொலைந்துபோன கைப்பேசிகளை மீட்பதில் தெலுங்கானா மாநிலக் காவல்துறை இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் உள்ளது.
தெலுங்கானா காவல்துறை சராசரியாக நாளொன்றுக்கு 76 கைப்பேசிகளை மீட்டுள்ளது,
தெலுங்கானாவில் கடந்த 2023 ஏப்ரல் 19ஆம் தேதி மையக் கருவி அடையாளப் பதிவு இணையவாயில் தொடங்கப்பட்டது; பின்னர் 2023 மே 17ல் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதுமுதல் இதுவரை 30,049 கைப்பேசிகளை அம்மாநிலக் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
கைப்பேசித் திருட்டைத் தடுக்கவும் போலிக் கைப்பேசிகளைத் தடுக்கவும் அந்த இணையவாயிலை மத்திய தொலைத்தொடர்புத் துறை உருவாக்கியது.
தொலைந்துபோன அல்லது திருட்டுப்போன கைப்பேசிகள் மீட்பில் கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 35,945 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவும் (15,426), ஆந்திராவும் (7,387) முறையே மூன்றாம், நான்காம் இடங்களில் உள்ளன.