தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பையில் டெஸ்லா விற்பனையகம் திறக்கப்படும்

1 mins read
d0e4b9ba-107e-471d-9acb-b6e9517a3ef8
மற்ற உற்பத்தி ஆலைகளின் மிதமிஞ்சிய உற்பத்தி ஆற்றலாலும் குறைந்துவரும் விற்பனையாலும் டெஸ்லா, இந்தியாவில் கார் விற்கும் முடிவை எடுத்துள்ளது.  - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், தனது முதல் விற்பனையகத்தை மும்பையில் வரும் ஜூலை 15ஆம் தேதி திறக்கவுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கார்களையும் விற்பனைப் பொருள்களையும் தருவித்துள்ள அந்நிறுவனம், உலகில் கார்களுக்கு மூன்றாவது ஆகப் பெரிய சந்தையான இந்தியாவில் முதன்முறையாகச் செயல்படவுள்ளது.

மும்பையின் வர்த்தக வட்டாரத்திலுள்ள பண்ட்ர குர்லா கட்டடத்தில் இந்த விற்பனையகம் திறக்கப்படும்.

மற்ற உற்பத்தி ஆலைகளின் மிதமிஞ்சிய உற்பத்தி ஆற்றலாலும் குறைந்துவரும் விற்பனையாலும் டெஸ்லா, இந்தியாவில் கார் விற்கும் முடிவை எடுத்துள்ளது. 

இந்தக் கார்களுக்கு கிட்டத்தட்ட 70 விழுக்காடு இறக்குமதி தீர்வை உள்ளிட்ட கூடுதல் கட்டணங்கள் செலுத்தப்படவேண்டும்.

இந்தியாவின் இறக்குமதி தீர்வை குறித்து டெஸ்லா நிறுவன உரிமையாளர் இலோன் மஸ்க் குறைகூறியுள்ளார்.

இருந்தபோதும் அந்நிறுவனத்தை இந்தியாவில் தளம் அமைப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பல்லாண்டுகளாக முயற்சி எடுத்து வந்தார். மின்வாகனங்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிலேயே அவற்றைத் தயாரிக்கும்படி வைப்பது அவரது நோக்கமாக இருந்து வருகிறது.

2024ல் இந்தியாவில் மின்சார வாகன முதலீட்டை திரு மஸ்க் அறிவிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த பயணம், கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் தற்போது கார் உற்பத்தி செய்வதில் ஆர்வம் இல்லை என்று டெஸ்லா தெரிவித்தது.

இந்தியாவின் இறக்குமதி வரிகளைத் தவிர்க்க டெஸ்லா அங்கு உற்பத்தி ஆலை அமைப்பது அமெரிக்காவுக்கு நியாயமற்றதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்