தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் டெஸ்லாவின் முதல் காட்சிக்கூடம் திறப்பு

1 mins read
7b44d95a-d203-4a1a-8fc8-d570bdb1a3c6
மும்பையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டெஸ்லா காட்சிக்கூடம். - படம்: ராய்ட்டர்ஸ்

மும்பை: அமெரிக்கப் பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்க்கின் டெஸ்லா மின்சார வாகன நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் காட்சிக்கூடத்தைத் திறந்துள்ளது.

காட்சிக்கூடம் மும்பையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) திறக்கப்பட்டது.

காட்சிக்கூடத்தின் திறப்புவிழாவில் மகாராஷ்டிராவின் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்துகொண்டார்.

டெஸ்லாவின் ஒய் ரக கார்களை இந்தியாவில் அது விற்பனை செய்ய இருக்கிறது.

அவ்வகை கார் ஏறத்தாழ $89,450க்கு விற்கப்பட உள்ளது.

இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிலிருந்து டெஸ்லா கார்களை இந்தியச் சாலைகளில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மூன்றாவது ஆகப் பெரிய கார் சந்தையாக இந்தியா திகழ்கிறது.

அந்நாட்டில் விற்கப்படும் கார்களில் மின்சார கார்களின் எண்ணிக்கை நான்கு விழுக்காடு மட்டுமே.

ஜெர்மனியின் சொகுசு கார் நிறுவனங்களான பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ் போன்றவற்றுடன் டெஸ்லா போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்