தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

1 mins read
a4506019-2a3b-4f0e-8987-28157e7d7269
2026 ஏப்ரலில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைக் கைப்பற்றியது.  - கோப்புப்படம்: ஏஎஃப்பி

சென்னை: தமிழகச் சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின்மீது நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பிறகு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த ஏப்ரலில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களைக் கைப்பற்றியது.

இருப்பினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 என்ற பெரும்பான்மை இலக்கை அக்கட்சியால் எட்ட முடியவில்லை.

ஆயினும், வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி கூட்டணி ஆட்சியை அமைத்தது.

அதனைத் தொடர்ந்து, கடந்த மே 13ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அப்போது, அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதனையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அம்மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வின்முன் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவை முழுமையாக நிராகரித்து தள்ளுபடி செய்தனர்.

மனுதாரரின் புகாரில் நம்பகமான சான்றுகள் எதுவும் இல்லை என்றும், தெளிவற்ற, தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பின்போது நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்