வீட்டில் நகையைக் கொள்ளையடித்து, உணவு சாப்பிட்டுச் சென்ற திருடர்கள்

1 mins read
5acbd192-5be5-4cb4-9edd-492c8c6aab5b
குளிர்பதனப் பெட்டியில் இருந்த பழங்​கள், தின்​பண்​டங்​களை ருசித்துச் சாப்​பிட்டு விட்டு, 700 கிராம் நகையைக் கொள்ளையடித்துச் சென்ற திருடர்கள். ​ - படம்: ஏஐ

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் சாதர்​காட் பகு​தியைச் சேர்ந்​தவர் வியாபாரியான ஃபஹி​யுத்​தீன். அவரது மனை​வி தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்தார்.

வீட்​டிலிருந்த தனது வயதான பெற்​றோரிடம் சொல்​லி​விட்​டு, தனது மனைவியுடன் இருப்பதற்காக மருத்​து​வ​மனைக்குச் சென்றார் ஃபஹி​யுத்​தீன்.

இந்தச் சூழலில், ஃபஹி​யுத்​தீன் வீட்டுக்குள் நள்ளிரவு நேரத்தில் குதித்த இரு கொள்​ளை​யர்​கள், வீட்டிலிருந்த முதி​யோரை ஒரு அறை​க்குள் அடைத்துத் தாளிட்டனர்.

பின்​னர், வீட்​டின் இரும்பு பீரோ​வில் இருந்த 700 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்தனர்.

அதன்பின்​னர், குளிர்பதனப்பெட்டியில் இருந்த பழங்​கள், தின்​பண்​டங்​களை ருசித்துச் சாப்​பிட்டு விட்​டு அங்​கிருந்து அவர்கள் தப்பித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ​காலை வீட்​டுக்கு வந்த ஃபஹி​யுத்​தீன் தனது பெற்​றோரின் கூச்​சலையும் அழுகை​யை​யும் கேட்டு அதிர்ந்து போனார்.

நடந்த சம்பவம் தொடர்​பாக சாதர்​காட் காவலர்களிடம் புகார் அளித்​தார். வி​சா​ரணை நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்