மும்பை: இந்தி நடிகர் டைகர் ஷெராஃப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், மேலும் நான்கு பேரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. அவர்களில் இருவர் பெண்கள் ஆவர்.
ஏற்கெனவே ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் வைத்து முதன்மைக் குற்றவாளிகளான ரித்திக், ரேஹான், பூல் சிங் ஆகிய மூவரைக் காவல்துறை கைது செய்திருந்தது.
இந்நிலையில், தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்களை விநியோகம் செய்ததிலும், அவற்றை மும்பைக்குக் கொண்டு சேர்த்ததிலும் முக்கியப் பங்கு வகித்த குணால், சுமித், ராதா, பபிதா ஆகிய மேலும் நான்கு பேரை டெல்லி காவல்துறையின் சிறப்புத் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்தத் தாக்குதலின் பின்னணியில் குண்டர் கும்பல் தலைவனான லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
கைதான நால்வரும் மேலதிக விசாரணைக்காக மும்பை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
