ஹைதராபாத்: சீரடி ஹிசாரில் இருந்து திருப்பதிக்குச் சென்ற ரயிலின் இரு பெட்டிகள் திடீரென தீப்பற்றிக்கொண்டன.
இந்தத் தகவல் அறிந்த ரயிலின் ஓட்டுநர் உடனடியாக மற்ற பெட்டிகளை கழற்றி விடச் செய்து, ரயில் நிலையத்திற்கு கிழக்கே பீமாஸ் ரெசிடென்சி ஹோட்டல் அருகே உள்ள தண்டவாளத்தில் நிறுத்தினார்.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ பற்றிய பெட்டிகளுக்குள் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “இந்தச் சம்பவம் ரயில் நடவடிக்கைகளில் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து வெளியில் செல்லும், உள்ளே வரும் ரயில் சேவைகளில் எந்த இடையூறும் ஏற்படவில்லை,” என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தீ விபத்து குறித்து திருப்பதி ரயில்வே காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.