மீட்கப்பட்ட ஊழியர்கள்: உள்ளேயே நடைப்பயிற்சி, யோகா செய்தோம்

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநில சுரங்கப்பாதையில் சிக்கி 17 நாள்களுக்குப்பின் மீட்கப்பட்ட ஊழியர்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் செவ்வாய்க்கிழமை இரவு தொலைபேசி வழியாகப் பேசினர்.

அப்போது, தங்கள் நம்பிக்கையை இழக்காதிருக்க காலை நேரத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும் யோகப் பயிற்சி செய்ததாகவும் அவர்களில் ஒருவர் பிரதமரிடம் சொன்னார்.

தங்களை மீட்க எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்காக பிரதமர் மோடி, உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட்புக் குழுவினர் ஆகியோருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களையே அரசாங்கத்தால் மீட்க முடியும் என்ற நிலையில், தாங்கள் மாட்டிக்கொண்டது உள்ளூரிலேயே என்பதால் தாங்கள் கவலைப்படுவதற்கு ஏதுமில்லை என்று ஒருவர் கூறினார்.

அந்த ஊழியர்களுடன் பேசியபோது, “பல நாள்களாக அபாயத்தின் பிடியில் சிக்கியிருந்த நீங்கள் பாதுகாப்பாக வெளியில் வந்ததற்குப் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலவில்லை. இறைவனின் அருளால் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்,” என்று பிரதமர் சொன்னார்.

“பதினேழு நாள்கள் என்பது குறுகிய காலமல்ல. நீங்கள் அனைவரும் மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்தி, ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்திக் கொண்டீர்கள்,” என்று திரு மோடி கூறியதாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

மீட்புப் பணிகள் குறித்து தான் தொடர்ந்து தகவல் கேட்டு வந்ததாகவும் உத்தராகண்ட் முதல்வருடன் தான் தொடர்பில் இருந்ததாகவும் கூறிய பிரதமர், தகவல் கிடைத்து வந்ததாலேயே தன் கவலை குறைந்துவிடவில்லை என்றும் அந்த ஊழியர்களிடம் கூறினார்.

பல நாள்களாக சுரங்கப்பாதையில் அடைபட்டுக் கிடந்தபோதும், தாங்கள் அச்சப்படவோ பதற்றப்படவோ இல்லை என்று பீகாரைச் சேர்ந்த சாபா அகமது என்ற ஊழியர் சொன்னார்.

“நாங்கள் சகோதரர்களைப் போன்று, ஒற்றுமையுடன் இருந்தோம். இரவு உணவிற்குப்பின் உள்ளேயே உலவினோம். அன்றாடm காலையில் நடைப்பயிற்சியும் யோகப்பயிற்சியும் செய்யும்படி நான் எல்லாரிடமும் சொல்லி வந்தேன்,” என்று அகமது கூறினார்.

உத்தராகண்டின் சார் தம் வழித்தடத்தில் கட்டப்பட்டு வந்த அந்தச் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நவம்பர் 12ஆம் தேதி இடிந்து விழுந்ததால் அந்த ஊழியர்கள் வெளியேற முடியாமல் வழி அடைபட்டது.

இதனையடுத்து, அவர்களை மீட்கப் பல வழிகளிலும் தொடர்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதனையடுத்து, 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இடைப்பட்ட நாள்களில் ஆறு அங்குலக் குழாய் வழியாக அவர்களுக்குத் தேவையான உணவு, உயிர்வாயு, மருந்துப்பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பப்பட்டு வந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!