தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிதியுதவியை நிறுத்திய டிரம்ப்; இந்தியாவின் சில திட்டங்கள் பாதிக்கப்படலாம்

1 mins read
d301eaa4-6653-4743-96b6-56f853bed20d
வெளிநாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்குவதைத் தற்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு அண்மையில் உத்தரவிட்டார்.

தாங்கள் வழங்கும் நிதியுதவி புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு அமைகின்றதா என்பதை மறுபரிசீலனை செய்ய திரு டிரம்ப் அவ்வாறு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் திட்டங்களுக்கான பணிகளை இப்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க அனைத்துலக மேம்பாட்டு அமைப்பு (யுஎஸ்எய்ட்) சம்பந்தப்பட்ட எல்லா அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் யுஎஸ்எய்ட் நிதியுதவியுடன் செயல்படும் சுகாதாரம் தொடர்பான திட்டங்கள்தான் திரு டிரம்ப்பின் உத்தரவால் ஆக அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்று அஞ்சப்படுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. பொதுமக்களைச் சென்றடைய அடித்தள அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இது பொருந்தும்.

கல்வி, பருவநிலை மாற்றம் போன்ற மற்ற அம்சங்களும் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி யுஎஸ்எய்ட் அமைப்பு, இந்தியாவின் ஆறு மாநிலங்களில் செயல்பாட்டில் இருந்த தாய், சேய் சுகாதாரச் சேவைத் திட்டங்களுக்கு ஆதரவளித்து வந்தது. அந்த அமைப்பின் இணையத்தளத்தில் இவ்விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும் என்று கருதப்பட்டாலும் அடித்தளத்தில் பணியாற்றிவரும் சிறிய பொதுச் சமூக அமைப்புகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள்தான் யுஎஸ்எய்ட் நிதியுதவி அதிகம் பயன்படுத்தப்படுவதே அதற்குக் காரணம்.

குறிப்புச் சொற்கள்