ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப்பின் பெயர்

ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப்பின் பெயர்

1 mins read
f849e615-1d96-4df7-8b7d-feecf65b11f4
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

அமராவதி: ஹைதராபாத்தில் உள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெயரைச் சூட்ட தெலுங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

பெயர் சூட்டும் நிகழ்ச்சி ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள சாலைக்கு டோன்ல்ட் டிரம்ப் அவென்யூ எனப் பெயரிடப்படவுள்ளது.

அதேபோல், அந்தப் பகுதியில் அமையவுள்ள வெளிவட்டச் சாலைக்கு மறைந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயர் சூட்டப்படவுள்ளது.

அனைத்துலக அளவில் கூகல் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நினைவுகூரும் வகையில் முக்கிய வீதி ஒன்றுக்கு ‘கூகல் தெரு’ எனப் பெயரிடப்பட இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தைத் தொழில்நுட்பரீதியாகவும் புத்தாக்க முயற்சிகள் மூலமும் மேம்படுத்த முதல்வர் ரேவந்த் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக அனைத்துலக அளவில் பிரபலமான நபர்கள், நிறுவனங்களின் பெயரை மாநிலத்தில் உள்ள சாலைகள், தெருக்களுக்கு சூட்ட அவர் முடிவு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்