திமுக கூட்டணியில் ‘கொமதேக’வுக்கு இரு தொகுதிகள்

திமுக கூட்டணியில் ‘கொமதேக’வுக்கு இரு தொகுதிகள்

படம்: இந்து தமிழ் திசை

13 Mar 2026 - 7:33 pm

1 mins read

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தரப்பில் வெளியான அறிக்கையில், “நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரனும் இன்று (13-03-2026) கலந்து பேசினர்.

“அதில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது,” என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்