தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகை மிஞ்சியது ‘யுபிஐ’ மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை

1 mins read
2814868b-0406-448b-9eff-e5857601ee90
யுபிஐ மின்னிலக்கச் சேவை. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் கைப்பேசி மூலம் உடனுக்குடன் பணம் அனுப்பும் மின்னிலக்கச் சேவையான யுபிஐ (UPI) உலக மின்னிலக்கப் பணம் அனுப்பும் சேவைகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னேற்றம் கண்டுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைகளில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 37% அதிகரித்துள்ளதாக உலகளாவிய பணப் பரிவர்த்தனை மின்னிலக்க மையமான ‘பே செக்யூர்’ தெரிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் ஏறக்குறைய 81 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு யுபிஐயில் பரிவர்த்தனை நிகழ்ந்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள 40 சிறந்த மாற்று கட்டணமுறைகளை ‘பே செக்யூர்’ ஆய்வு செய்தது.

பின்னர் அது வெளியிட்ட தரவுகளின்படி, ஏப்ரல்-ஜூலை நான்கு மாதங்களில் வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகளை யுபிஐ சாதித்துள்ளது. 2022ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வினாடிக்கு 2,348 பரிவர்த்தனைகளே நிகழ்ந்தன. இந்த ஆண்டு அதில் 58% ஏற்றம் பதிவானது.

சீனாவின் அலிபே, பேபால், பிரேசிலின் பிக்ஸ் ஆகியவற்றைவிடவும் யுபிஐ முந்தியுள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ பரிவர்த்தனைகள் 20.6 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியது. இதுவே ஒரு மாதத்தின் அதிகபட்சப் பரிவர்த்தனை.

இதற்கிடையே, யுபிஐ மற்றும் ரூபே (RuPay) மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை சேவைகளை பல நாடுகளில் அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி (ரிசர்வ் பேங்க்) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்