உத்தராகண்ட்டின் சுற்றுப்பயணத் துறை எழுச்சி

1 mins read
ஆண்டிறுதிக்குள் 60 மில்லியன் சுற்றுப்பயணிகளை எதிர்பார்க்கும் மாநிலம்
13ff978d-8662-497b-8523-e77ac15f1046
உத்தராகண்ட் மாநிலம், தனௌல்டியில் உதயமாகும் ஹோட்டல்கள். - படம்: ஐஏஎன்எஸ்

புதுடெல்லி: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம், முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அங்கு சென்றுவரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சாதனை அளவாக அதிகரித்து வருகிறது.

சுற்றுப்பயணத் துறையைப் பொறுத்தமட்டில், 2023ல் உத்தராகண்ட் 59.6 மில்லியன் பயணிகளின் வருகையைப் பதிவுசெய்தது. 2018ல் பதிவான 36.8 மில்லியன் பயணிகளின் எண்ணிக்கையைவிட இது 61.79 விழுக்காடு அதிகம்.

2024ல் மட்டும் ஆகஸ்ட் வரை கிட்டத்தட்ட 30 மில்லியன் பயணிகள் அந்த மாநிலத்துக்குச் சென்று திரும்பினர். வரும் டிசம்பர் நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 60 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் தேசிய, அனைத்துலக அரங்கில் உத்தராகண்ட் கண்டுள்ள எழுச்சியும் இதற்குக் காரணம்.

உத்தராகண்ட்டின் சுற்றுப்பயணத் துறையை வலுப்படுத்த மாநில அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக சாகச சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, யாத்திரை போன்ற அம்சங்களில் அது கவனம் செலுத்தி வருகிறது.

இதுகுறித்து பேசிய மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “உத்தராகண்ட் அதன் வளமான கலாசார, மரபுடைமைக்கு அனைத்துலக சுற்றுலா வரைபடத்தில் தனியிடம் கொண்டுள்ளது. அதன் இயற்கை எழிலும் துடிப்புமிக்க நாட்டுப்புறப் பாரம்பரியமும் நீண்டகாலமாகவே சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ளன,” என்றார்.

குறிப்புச் சொற்கள்