மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் இயற்கையை ரசிக்க ‘விஸ்டாடோம்’ பெட்டி

மதுரை - குருவாயூர் விரைவு ரயிலில் இயற்கையை ரசிக்க ‘விஸ்டாடோம்’ பெட்டி

படம்: இபிஎஸ்

24 Oct 2026 - 6:36 pm

1 mins read

புதுடெல்லி: கேரளா நோக்கிச் செல்லும் குருவாயூர் விரைவு ரயிலில் முதன்முறையாக ‘விஸ்டாடோம்’ என அழைக்கப்படும் சொகுசுப் பெட்டியைத் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

‘விஸ்டாடோம்’ என்றால் சுற்றுப்புறக் காட்சிகளைப் ரசிப்பதற்காக, பெரிய சன்னல்களும் கண்ணாடி கூரையும் கொண்ட சொகுசு ரயில் பெட்டி ஆகும்.

செங்கோட்டை-புனலூர் மலைப்பகுதியில் உள்ள எழில்மிகு காட்சிகளைப் பயணிகள் கண்டு மகிழ்வதற்கும் தங்களின் பயண அனுபவத்தை அவர்கள் மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை-குருவாயூர்-மதுரை விரைவு ரயிலில் தற்காலிகச் சோதனை முறையில் அந்தச் சொகுசுப் பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.என். நாராயண் தெரிவித்தார்.

மேலும், 2027ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை அப்பெட்டி அந்த ரயிலில் இணைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

குளிர்சாதன இருக்கைப் பெட்டியான ‘விஸ்டாடோம்’ இணைக்கப்பட்டதால் ரயிலின் பெட்டிகள் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, அந்த ரயிலில் ஒரு விஸ்டாடோம் பெட்டி, ஒரு மூன்றடுக்குக் குளிர்சாதனப் பெட்டி, இரண்டு படுக்கை வசதிப் பெட்டிகள், ஏழு பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டி, ஒரு சரக்குப் பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்