ஆக்கபூர்வமான பங்களிப்பை விரும்பும் சீனா

1 mins read
7a580f52-e5d3-4cd3-a69e-cd32e0a3bb46
இந்தியா-பாகிஸ்தான் சண்டை தொடரும் வேளையில் சனிக்கிழமை (மே 10) ரயிலில் ஜம்முவிலிருந்து புறப்படத் திரண்ட மக்கள். - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதியை ஏற்படுத்த சீனா, ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தை சீனா மிக உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“இந்த மோதல் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. அமைதி, நிலைத்தன்மையை உருவாக்கும் முயற்சியை இருதரப்பும் மேற்கொள்ள வேண்டும்.

“இதைக் கருத்தில் கொண்டு இரு தரப்பினரும் பிரச்சினையை பெரிதாக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

“இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இது மிகவும் முக்கியம். உலக நாடுகளும் இதைத்தான் விரும்புகின்றன,” என்றார் சீன செய்தித் தொடர்பாளர்.

குறிப்புச் சொற்கள்