நான்கு மாநிலங்களில் களைகட்டிய புத்தாண்டுக் கொண்டாட்டம்

1 mins read
ad606696-8f19-4cc1-8192-320900c50ae6
மும்பையில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டம். - EPA-EFE

அமராவதி: தெலுங்குப் புத்தாண்டு தினமான உகாதிப் பண்டிகை (மார்ச் 30) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தெலுங்கு மக்கள் அதிகம் வாழும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டின.

கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளிலும் இந்தப் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

இதே நாளை மகாராஷ்டிராவிலும் குடி பத்வா என்ற பெயரில் புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகிறார்கள். இது ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, அயோத்தி திரும்பிய நாளைக் குறிப்பதாகவும் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்