‘வாட்ஸ்அப்’ வாயிலாக புறநோயாளிகள் பதிவு செய்யும் முறை அறிமுகம்

‘வாட்ஸ்அப்’ வாயிலாக புறநோயாளிகள் பதிவு செய்யும் முறை அறிமுகம்

1 mins read
f845e122-f37a-458e-9a8b-e58c21d32c0d
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய வசதியை நோயாளிகள் பெறலாம். - கோப்புப் படம்: தினமணி

சென்னை: அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் ‘வாட்ஸ்அப்’ வாயிலாகப் பதிவுசெய்யும் முறை தொடங்கப்பட்டு உள்ளது.

அந்த வசதியைத் தமிழகத்தின் 22 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை நோயாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதன் மூலம், மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், இருக்கும் இடத்திலேயே பெயரைப் பதிவு செய்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் புறநோயாளிகள் பெறலாம்.

96192 22999 என்ற எண்ணில் ‘நலம் ஏஐ’ எனும் ‘வாட்ஸ்அப்’ உரையாடல் வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் புதன்கிழமை (ஜூலை 8) தொடங்கி வைத்தாா்.

அந்த ‘வாட்ஸ்அப்’ எண்ணில் ‘ஏஐ’ என அனுப்பினால் ஒரு முறை பயன்படும் கடவுச்சொல் (ஓடிபி ) பயனாளியின் கைப்பேசிக்கு வரும். அதைப் பதிவு செய்து புறநோயாளிகள் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

குறிப்பாக, புறநோயாளிச் சீட்டு, மருந்துச் சீட்டு, பரிசோதனை அறிக்கை, சுகாதார அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகளை அதன் மூலம் பெறலாம்.

இது தவிர, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘இ-ஐசியூ’ எனப்படும் சிறப்புத் தீவிர சிகிச்சைப் பிரிவையும் அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்து பாா்வையிட்டார்.

குறிப்புச் சொற்கள்