நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை தாக்கல் செய்தார் வில்சன்

1 mins read
ab0d7d3a-0c39-44c0-a30e-35d41a4440f1
மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன். - படம்: தமிழக ஊடகம்

புதுடெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாவைக் கொண்டுவந்துள்ளார்.

அவர் கொண்டுவந்துள்ள மசோதாவில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தனது வாழ்க்கையில் இதை ஒரு முக்கியமான நாளாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை நியமனங்களைச் சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது, மக்கள் தொகை, பெண்கள் விகிதாசாரத்திற்கு ஏற்ப, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் ஒரு முக்கியமான தனிநபர் மசோதாவைத் தான் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்