தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடனுக்காக மகனை விற்ற பெண்

1 mins read
43eab442-bff2-4c25-b443-bcae202bb521
தனது மகனுடன் முகமது ஹரூன். - படம்: ஊடகம்

பாட்னா: வங்கியில் பெற்ற ரூ.9,000 நகைக்கடனுக்காக, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தன் மகனையே விற்றுள்ளார்.

அங்குள்ள அராரியா மாவட்டத்தில் உள்ள பச்சிரா கிராமத்தைச் சேர்ந்த முகமது ஹரூன், ரெகானா தம்பதியர் வறுமையில் வாடுகின்றனர்.

இதையடுத்து, தனியார் நிறுவனத்தில் ரூ.50,000 கடன் பெற்றனர். எனினும் கடனுக்குரிய தவணைகளை உடனுக்குடன் செலுத்த முடியாமல் தவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக தவணை நிலுவைத் தொகை சேர்ந்ததால் கடும் அழுத்தத்துக்கு ஆளானதாகச் சொல்கிறார் ரெகானா.

தனியார் நிறுவனத்தின் கடன் வசூலிக்கும் முகவர்கள் தொடர்புகொண்டு தங்கள் மீது வழக்கு தொடரப்போவதாக மிரட்டியதாகவும் பலவிதமாக துன்புறுத்தியதாகவும் ரெகானா அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேறு வழி இல்லாமல் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக குழந்தையை விற்கும்படி தனது சகோதரர் ஆலோசனை கூறியதாகவும் அதன் பேரில் குழந்தையை விற்றதாகவும் ரெகானா மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்