மும்பை: அனைத்துலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிராவில் முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே வைத்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது.
மார்ச் 8ஆம் தேதி, சி.எஸ்.எம்.டி - சாய்நகர் ஷீரடி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயிலில், ‘லோகோ பைலட்’ (ஓட்டுநர்), பயணச்சீட்டு பரிசோதகர்கள், துப்புறவுப் பணியாளர்கள் என அனைவருமே பெண்களாக இருந்தனர்.
பெண் லோகோ பைலட்களான சுரேகா யாதவ், சங்கீதா குமாரி ஆகியோர் ரயிலை இயக்கினர்.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, ஏராளமானோர் அதைப் பகிர்ந்தனர்.
மேலும், ரயிலை வெற்றிகரமாக இயக்கிய பெண்கள் குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.