தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செயற்கை நுண்ணறிவுக் காணொளித் தொழில்நுட்பத்திற்கு 60 மில்லியன் டாலர் முதலீடு

1 mins read
5a33ff02-6b44-4b4b-b9f4-b09a80be63c2
ஊடகத் தொழில்நுட்பத்தில் பெருகிவரும் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை 60 மில்லியன் டாலர் முதலீடு காட்டுகிறது.  - படம் செயற்கை நுண்ணறிவு

செயற்கை நுண்ணறிவுவழி காணொளிகளை உருவாக்க உதவும் பிக்ஸ்வெர்ஸ் (PixVerse) மென்பொருள் நிறுவனம், 60 மில்லியன் அமெரிக்க டாலர் (S$77 மில்லியன்) மதிப்புள்ள முதலீட்டைப் பெற்றுள்ளது. 

அலிபாபா, ஆன்ட்லர் ஆகிய பெருநிறுவனங்கள் இந்தத் தொகையை முதலீடு செய்கின்றன. 

உலகெங்கிலும் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் பிக்ஸ்வர்ஸ், இதுவரை 800 மில்லியனுக்கும் அதிகமான காணொளிகளின் உருவாக்கத்திற்குத் துணைபுரிந்தது. 

ஊடகத் தொழில்நுட்பத்தில் பெருகிவரும் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவத்தை இந்த முதலீடு காட்டுகிறது. 

பிக்ஸ்வெர்ஸ் அண்மையில் அதன் சேவையின் புதிய பதிப்பை பிக்ஸ்வெர்ஸ் வி5 என்று அறிமுகப்படுத்தியது. இந்தப் பதிப்பின் வழியாக காணொளிகளைக் கூடுதல் வேகத்துடனும் சிறப்புடனும் உருவாக்கலாம். 

கடந்த இரண்டு ஆண்டுகளில், பிக்ஸ்வெர்ஸ் அனைவருக்கும் காணொளி உருவாக்கத்தை எளிதாக்க பல புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது. 

பிரபலமான அம்சங்களில், ஸ்பைடர்மேன் தொடரில் இடம்பெறும் எதிர்மறை பாத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘வெனம் இஃபெக்ட்’ ஆகும். ஒரு பில்லியனுக்கும் அதிகமான காணொளிகளை உருவாக்க இது பயன்படுத்தப்பட்டது.

நகைச்சுவைக் காணொளிகளுக்கு மட்டுமின்றி விளம்பரங்களையும் கற்றல் வளங்களையும் தயாரிக்க இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. 

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனாளர்கள் தங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும், தங்கள் கதைகளைச் சொல்லவும் உதவுவது தனது நோக்கமாக இருப்பதாக நிறுவனம் கூறுகிறது. தற்போது 13 மொழிகளில் செயல்படும் பிக்ஸ்வெர்ஸ், மேலும் 175க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்