கடந்த ஆகஸ்ட் 23 சனிக்கிழமை காலை தெலுக் குராவ் சாலையிலுள்ள முஸ்லிம் கிட்னி ஆக்ஷன் சென்டரில் அப்தலி தையிபலி கல்வி, நலநிதியம் ஏற்பாடு செய்திருந்த கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்வி உதவித்தொகையுடன், அந்த மாணவர்கள் மேலும் கல்வி கற்கவும் மாணவர் பருவத்தை மேம்படுத்திக்கொள்ளவும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று அறநிதியத்தின் பொறுப்பாளரும் முஸ்லிம் கிட்னி ஆக்ஷன் நிறுவனத்தின் தலைவருமான ஹாஜி அமீரலி அப்தலி உறுதி அளித்தார்.
நான்காவது முறையாக நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் முஹம்மது இர்ஷாத் பங்கேற்றார். நிகழ்வில் முஸ்லிம் கிட்னி ஆக்ஷன் அமைப்பின் செயலவை உறுப்பினர் டாக்டர் அனிக் அஹ்சன், சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத்தலைவர் அ. முஹம்மது பிலால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

