நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை இங்கே காணலாம்

சிங்கப்பூர், மோசடிக்காரர்களுக்கு முக்கிய இலக்காக உள்ளது

2022ஆம் ஆண்டின்  முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிட  2023ஆம் ஆண்டின் , இதே காலகட்டத்தில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 64 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அன்றாட வேலைகளை முடிக்க நீங்கள் விரைந்துகொண்டிருக்கிறீர்கள்.,  திடீரென்று உங்களின் நாளே மாறுகிறது.  பணம் கேட்டு ஒரு “நண்பர்” அழைக்கிறார்;  ‘மலிவான  விலையில் கடல் உணவு’ எனும் சமூக ஊடகம் விளம்பரம் உங்கள் ஆசையைத் தூண்டி விடுகிறது; அதிக வருமானத்துடன் ஒரு வேலை வாய்ப்பு அழைக்கிறது.      

நீங்கள் பதிலளிக்கிறீர்கள். நீங்கள் உணர்வதற்கு முன்னரே, 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மோசடிக்கு ஆளான 22,339 பேரில் நீங்களும் ஒருவராகி விட்டீர்கள்.

மோசடி பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், பலர் இன்னும் மோசடிக்காரர்களின் வலையில் விழவே செய்கின்றனர். நிலைமை மேலும் மோசமடைந்து வருகிறது.  

2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, 2022ஆம் ஆண்டின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை 64.5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சிங்கப்பூர் காவல்துறையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

“ ஏமாற்றுப்படுவோம் என்று  எதிர்பார்த்து நாம் ஒவ்வொரு நாளையும் கடத்துவதில்லை. நம்மில், இணையத்தைப் பயன்படுத்துவதில் வசதியாக உணரும் மின்னிலக்க ஆற்றலுள்ளவர்களுக்கு இருக்கும் ‘இது எனக்கு நடக்காது’ என்ற மனப்போக்கு  ஆபத்தை ஏற்படுத்துகிறது,” என்று கூறுகிறார் சிங்கப்பூர் காவல்துறை, மோசடி தொடர்பான பொதுக் கல்வி அலுவலக நடவடிக்கைத் துறையின் துணை இயக்குநர், திரு ஜெஃப்ரி சின். 

“நம்மில், இணையத்தைப் பயன்படுத்துவதில் வசதியாக உணரும் மின்னிலக்க ஆற்றலுள்ளவர்களுக்கு இருக்கும் ‘இது எனக்கு நடக்காது’ என்ற மனப்போக்கு  ஆபத்தை ஏற்படுத்துகிறது.”

இந்தப் பாதுகாப்பு உணர்வை மோசடிக்காரர்கள் சாதகமாக்கிக் கொள்கிறார்கள். “(அவர்கள்)  சிந்திக்க நேரம் கொடுக்காமல், அவசரநிலையை உருவாக்குவதுபோன்ற, தூண்டிவிடும் தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இது பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட, மோசமான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது.”

“ சோர்வாக, மன உளைச்சலாக அல்லது வேலையாக இருக்கும் தருணங்களில், போதிய விழிப்புடன் இல்லாமல் இருக்கலாம். அத்தகைய நேரத்தில்தான்  அதிகளவு, எளிதில் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறோம்,” என்று திரு சின் கூறுகிறார்.

“கைப்பேசிச் சாதனங்களில் ‘ ஸ்கேம்ஷீல்டு ’ செயலியைப் பதிவிறக்கம் செய்வது,  உறுதியாகத் தெரியாவிட்டால் அதிகாரபூர்வ ஆதாரங்களைக் கொண்டு சோதனை செய்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை பரிந்துரைக்கிறது. மோசடிகளுக்கு எதிராகக் கூடுதல் தற்காப்பை இது வழங்கும். ”  

தீங்கு விளைவிக்கும் மென்பொருள் அதிகரிப்பு

கடந்த சில மாதங்களில் மிகவும் குழப்பமான போக்கு,  தீங்குநிரல் (Malware) மென்பொருள்களால் ஏற்படும்  மோசடிகளின் அதிகரிப்பு ஆகும்.

2023ஆம் ஆண்டு ஜனவரிக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் இடையில் இத்தகைய மோசடிகளில் ஏறக்குறைய 1,400 பேர் பாதிக்கப்பட்டதாகவும் குறைந்தது $20.6 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீங்குநிரல் மென்பொருளால் செய்யப்பட்ட மோசடிகள், பொதுவாக பாதிக்கப்பட்டவர்களை தீங்குநிரல்  செயலிகளைப் பதிவிறக்கம் செய்யவைப்பதன் மூலம் நடைபெறுகின்றன.

“மோசடிக்காரர்கள் குறுஞ்செய்தித் தளங்கள் வழியாக பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு, சேவைகள் அல்லது தயாரிப்புகளுக்கான கட்டணங்களைச் செலுத்த இந்தச் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யத் தூண்டுவார்கள்,” என்று திரு சின் விவரிக்கிறார்.

“தீங்குநிரல்  மென்பொருள் செயலியைப் பதிவிறக்கம் செய்தவுடன், மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் சாதனங்களின் இணைய வங்கிச் சேவை  அல்லது வங்கி அட்டை விவரங்களைப் பெறுகிறார்கள்.  

தீங்குநிரல் மென்பொருள், தீங்குநிரல் இணைப்புகளிலிருந்து பாதுகாக்க, அதிகாரபூர்வ செயலித் தளங்கில் இருந்து கிருமி எதிர்ப்பு (ஆண்டிவைரஸ்) செயலிகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்துகிறது. பரிந்துரைக்கப்பட்ட ஆண்டிவைரஸ் செயலிகளின் பட்டியலை go.gov.sg/antivirusapps என்ற இணையத்தளத்தில் காணலாம்.  

சிங்கப்பூர் ஒரு முக்கிய இலக்காக உள்ளது.

சிங்கப்பூரில் மோசடிக்கு ஆளானவர்களில் பெரும்பாலும்   4,031 அமெரிக்க டாலர் (5,506 சிங்கப்பூர் வெள்ளி) சராசரியாக ஒருவர் இழக்கிறார் என்று மோசடிகளின் உலகளாவிய நிலை குறித்த 2023 அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பாதிப்படைந்த ஒருவர், 3,767 அமெரிக்க டாலர் சராசரி இழப்புடன் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்திலும்,  ஆஸ்திரியா 3,484 அமெரிக்க டாலர் சராசரி இழப்புடன் மூன்றாம்  இடத்திலும் உள்ளது.

மோசடிக்காரர்களுக்கு சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் “கவர்ச்சிகரமானவர்களாக” ஆக்குவது எது?

“சிங்கப்பூர் ஒப்பீட்டளவில் செல்வச் செழிப்புடன் இருக்கிறது. அதாவது, மோசடிக்காரர்கள் தங்கள் முயற்சிகளில் அதிக வருமானம் பெறுகின்றனர்,” என்று திரு சின் கூறுகிறார்.  சிங்கப்பூரின் அதிக இணைய பயன்பாடு விகிதமும் வெளிநாடுகளில் செயல்படும் மோசடிக் குழுக்களுக்கு வசதியாக உள்ளது,”

முதல் நிலையில் 3 மோசடி வகைகள்

 அனைத்து வயதுப் பிரிவினருக்குமிடையே 2023 ஜனவரி  முதல் ஜூன் வரை 

 வேலை மோசடி: தரகுப் பங்காக ரொக்கப் பணத்தைக் கேட்பதற்கு முன், மோசடிக்காரர்கள் எளிதான, அதிக சம்பளம் தரும் வேலைகளை வழங்குகின்றனர்

 மின் வணிக மோசடி:  பாதிக்கப்பட்டவர்கள் கவர்ச்சிகரமான  இணைய சலுகைளால் ஈர்க்கப்படுகிறார்கள்.  பணம் செலுத்திய பிறகு பொருள்கள் கிடைக்காமல் ஏமாறுகிறார்கள்

 போலி நண்பர் அழைப்பு மோசடி: உதவி அல்லது பணம் கேட்டு மோசடிக்காரர்கள் நண்பர்கள்போல் ஏமாற்றுவது.

ஐவரில் கிட்டத்தட்ட மூவர்

20 முதல் 39 வயது வரையிலான இளையர்கள்,  அதே காலகட்டத்தில் மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள், 

 இந்த வயதினரிடையே  மிகவும் பொதுவான மோசடி வகைகள்: வேலை மோசடி, மின் வணிக மோசடி, போலி மின்னஞ்சல்.

மோசடிக்காரர்களின் வழிகள்:

செய்தி அனுப்பும் தளங்கள் | சமூக ஊடகம் | தொலைபேசி அழைப்புகள்

உங்களையும் அன்புக்குரியவர்களையும் மோசடிகளிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்

ஸ்கேம்ஷீல்டு, பாதுகாப்பு அம்சங்களைச் சேர்க்கவும்:

ஸ்கேம்ஷீல்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் சாதனங்களில் வங்கிகள் மற்றும் சமூக ஊடகக் கணக்குகள் ஆகியவற்றுக்கான இரண்டு அம்சம் உறுதிப்பாடு போன்ற பாதுகாப்பு வகைகளை அமைக்கவும். அண்மைய பாதுகாப்பு அம்சங்ளுடன் சாதனங்களைப் புதுப்பித்து, வைரஸ் தடுப்பு செயலியை பதிவிறக்கவும்.  

மோசடி அறிகுறிகள், அதிகாரபூர்வ வளங்களைச் சரிபார்க்கவும்:

மோசடி சாத்தியம் குறித்த ஐயப்பாடு இருந்தால், நம்பிக்கைக்குரிய இடத்தில் இரண்டாவது கருத்தை நாடுங்கள். எடுத்துக்காட்டாக,  1800 722 6688 என்ற மோசடி எதிர்ப்பு உதவி எண்ணில் அழைக்கவும் அல்லது அண்மைய மோசடி போக்குகளைப் பற்றி அறிய  www.scamalert.sg. என்ற  NCPC-யின் மோசடி எச்சரிக்கை இணையத்தளத்தைக் காணவும்.    

அதிகாரிகள், குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரிடம் சொல்லுங்கள்:

 நீங்கள் மோசடிகளை எதிர்கொண்டால் அதிகாரிகளிடம் புகார் அளியுங்கள். மேலும் சந்தேகத்திற்குரிய கணக்குகள் அல்லது சுயவிவரங்களை அந்தந்த சமூக ஊடகத் தளங்களில் தெரிவித்து, அவற்றைத் தடுக்கவும். ஆக அண்மைய மோசடிப் போக்குகள் பற்றிய தகவல்களை உங்கள் குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். அண்மைய மோசடி எதிர்ப்பு ஆலோசனைகளைப் பெற ncpc மோசடி எச்சரிக்கை வாட்ஸ்அப் சேனலைத் தொடரவும். 

சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!