தமிழ்மொழி விழா 2025ன் ஓர் அங்கமாக வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில் ஏப்ரல் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, எண் 2 பீட்டி சாலையிலுள்ள உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில், ‘தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!’ எனும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
தமிழ்நாட்டில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருபவரும் எழுத்தாளரும் கவிஞருமான திரு ஜோ. அருள்பிரகாஷ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சையட் ஹாருன் அல்ஹப்சி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். மேல்விவரங்களுக்கு 96933786 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அனுமதி இலவசம்.