அருந்ததி ராயின் இரண்டாவது நாவல் வரும் செவ்வாய்க்கிழமை விற்பனைக்காக வெளிவரவுள்ளது.
அவரது முதல் நாவலான தற்போது ‘த காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ (The God of Small Things) வெளியாகி 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நாவல் வெளிவருகிறது.
‘த மினிஸ்ட்ரி ஆஃப் அட்மோஸ்ட் ஹேப்பினஸ்’ (The Ministry of Utmost Happiness) என்பது அவரது புதிய நூலின் தலைப்பாகும்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்நூல் வெளிவருகிறது.
இந்தப் புத்தகம் வாசகர்களை “பழைய டெல்லியின் நெரிசலான பகுதிகளிலிருந்து புதிய பெருநகரத்திற்கு” அழைத்துச் செல்கிறது என்றும், பின்னர் பிரச்சினைகள் நிறைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மத்திய இந்தியாவின் காடுகளுக்கு அழைத்துச் செல்கிறது என்றும் அவரது பதிப்பகமான பெங்குயின் தெரிவித்துள்ளது.
அருந்ததி ராயின் முதல் நாவல், அவருக்கு அனைத்துலகப் புகழைத்தந்தது. இந்தியாவில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் போராளியாகவும் காணப்பட்டு வந்தார்.
1997-ல் வெளியான முதல் புத்தகம் அவருக்கு மதிப்புமிக்க புக்கர் பரிசை ஈட்டித்தந்தது. அந்தப் பரிசை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை அருந்ததி ராயைச் சேரும்.
சுமார் 8 மில்லியன் புத்தகப் பிரதிகள் விற்கப்பட்டதை அடுத்து அருந்ததி ராய் இலக்கிய உலகின் நட்சத்திரமாக மாறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதைத் தொடர்ந்து, அவர் அரசியல் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.
வறுமை, உலகமயமாக்கல், காஷ்மீர் பிரச்சினை போன்ற பல்வேறு விவகாரங்களைப் பற்றி எழுதியுள்ள அவர், பெரும்பாலும் இந்திய ஆளும் வர்க்கத்தைக் கடுமையாக விமர்சித்து வருபவர்.
அவரது இந்தப் போராட்ட குணம், இந்திய அமைப்பில் உள்ள பலரின் அதிருப்திக்கு ஆளானது.