தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பயன்பாடு அதிகம். பயன்கள் ஏராளம்.

சிறுதானியங்களின் நன்மைகள் பல

2 mins read
6b70da0f-9111-49d6-a8d3-2468551f06f4
ஊட்டம் நிறைந்த சிறுதானியங்கள் உடலுக்கு நன்மை தருபவை.  - படம்: பிக்சாபே

ஏழு வகையான சிறுதானியங்களின் தனித்துவம், தமிழர் பண்பாட்டில் போற்றப்படுவதுடன், மேற்கத்திய நாடுகளில் ‘சூப்பர்ஃபுட்’ (superfood) என்று கருதப்படுகிறது. 

‘சூப்பர்ஃபுட்’ என்பது உடலுக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்களின் தேவையை நிறைவுசெய்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கவும் நோய் வராமல் தடுக்கவும் செய்கிறது. 

வரகு (Kodo Millet)

சற்று கசப்பான வரகில் இருக்கும் புரதச்சத்து, தாது உப்புவகைகள் ஆகியவை உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றைக் குறைக்க உதவும். 

சாமை (Little Millet)

அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, ‘பி’ வைட்டமின்கள் நிறைந்த சாமை, பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிக உகந்த சிறுதானியமாகும். மேலும், செரிமானத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சாமை பெரும்பங்காற்றுகிறது. 

தினை (Foxtail Millet) 

மாவுச்சத்து நிறைந்திருக்கும் தினையை, அரிசி மாவுக்குப் பதிலாக தோசை, இட்லி போன்ற உணவு வகைகளில் பயன்படுத்தலாம். அதன் நார்ச்சத்து, கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

குதிரைவாலி (Barnyard Millet) 

எடை குறைக்க விரும்புவோருக்கு கலோரிகள் (calories) அதிகம் இல்லாத குதிரைவாலி மிக உகந்தது. மேலும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் (phosphorus) போன்றவையும் இந்த தானியத்தில் அடங்கியுள்ளன.

கம்பு (Pearl Millet) 

அதிக இரும்புச்சத்து, மெக்னீசியம் (magnesium), புரதச்சத்து கொண்டுள்ள கம்பு பெரும்பாலும் ரத்தக் குறைப்பாட்டுக்கு உதவும். அத்துடன் உடல் வெப்பம், சோர்வு, வயிற்றுப்புண், தேவையற்ற கொழுப்பு போன்றவற்றைக் குறைக்கவும் கம்பு பயன்படுகிறது.

கேழ்வரகு (Finger Millet) 

சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்களிடையே கேழ்வரகு மிகப் பிரபலமான சிறுதானியமாகும். இதில் அடங்கியுள்ள கால்சியம் அளவு குறிப்பாக எலும்புகளை வலுவாக்க உதவும். 

சோளம் (Sorghum Millet)

சோளம் புற்றுநோய் அபாயங்களை எதிர்த்துப் போராடவும், செரிமானத்தை அதிகரிக்கவும் அழற்சி (inflammation) குறைக்கவும் உதவும் ஒரு சிறுதானியம். சோளத்தில் குளூட்டன் இல்லாததால் குளூட்டன் ஒவ்வாமை உள்ளவர்கள் இதை உண்ணலாம். 

குறிப்புச் சொற்கள்