கம்பன் விழாவில் பாரதி கிருஷ்ணகுமார்

கம்பன் விழாவில் பாரதி கிருஷ்ணகுமார்

1 mins read
cba61526-4418-46ed-97bc-dc0fda27b98a
தமிழகத் திரைப்பட, ஆவணப்பட தயாரிப்பாளர், இயக்குநர், தன்முனைப்புப் பேச்சாளர் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார். - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கம்பன் விழா வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 14) மாலை 5 மணி முதல் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறவிருக்கிறது.

விழாவில் நாடாளுமன்ற மேனாள் நியமன உறுப்பினரும் தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் தலைவரும் சுகாதாரச் சேவை ஊழியர்கள் சங்கத் தலைவருமான திருவாட்டி கே.தனலட்சி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

விழாவில் சிறப்பு அங்கமாக ‘மூல நூலும் முதன்மை நூலும்’ எனும் தலைப்பில் தமிழகத் திரைப்பட, ஆவணப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், தன்முனைப்புப் பேச்சாளர் முனைவர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை ஆற்றுவார்.

அதற்குமுன், ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள் படைக்கும் “சூர்ப்பணகை” குறுநாடகம் இடம்பெறும்.

பார்வையாளர்களுக்குக் கம்ப ராமாயணத்தில் ‘காஹூட்’ வழி புதிர்ப் போட்டி நடத்திப் பரிசுகள் வழங்கப்படும்.

கம்பன் விழாவை ஒட்டி கம்பன் கவிதைகளில் மாணவர்களுக்குக் காஹூட் வழியாகப் புதிர்ப் போட்டி நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

உயர்நிலை 1 & 2, உயர்நிலை 3, உயர்நிலை 4 & 5, உயர் கல்வி நிலையங்கள் ஆகியவை அப்பிரிவுகள். அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

குறிப்புச் சொற்கள்