சிங்கப்பூர் கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கத்தின் இரண்டு நூல்கள் வரும் சனிக்கிழமை, அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் வெளியீடு காண்கிறது.
கவிஞர் அமிர்தலிங்கம் எழுதிய ‘தானாக மையூறி’ என்ற கவிதைத் தொகுப்பையும் ‘மரபணுச் செப்பம்’ என்ற காப்பியத்தையும் கவிமாலை அமைப்பு வெளியிடவிருக்கிறது.
லூசரின் லூசரின் (LUZERNE) என்ற இடத்தில் நான்காவது தள அரங்கத்தில் நூல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியின்போது ‘தானாக மையூறி’, ‘மரபணுச் செப்பம்’ ஆகிய இரண்டு நூல்களும் திறனாய்வு செய்யப்படும்.
முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் இரா. தினகரன் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறார்.
நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். மேல் விவரங்களுக்கு 90053043 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.