தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உதவி தேவைப்படும் குடும்பங்களை ஆதரிக்க 4,800க்கும் மேற்பட்டோர் நடை

2 mins read
பத்துப் பெண் தொழில்முனைவர்கள் வழிநடத்தும் ‘நலனுக்காகப் பெண்கள்’ இயக்கம் அறிமுகம்
b3fc7884-5b2b-4f68-9370-bc7b7324b37c
இந்த 4.2 கிலோமீட்டர் நடை, சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை மரினா பேவைச் சுற்றி நடைபெற்றது. - படம்: சமூக உண்டியல்
multi-img1 of 2

சமூக உண்டியல் இதயச்சரங்கள் (Community Chest Heartstrings) வருடாந்திர நடை, 400,000க்கும் மேற்பட்ட சிறார்களுக்குப் பரிவைக் கற்றுக்கொடுத்துள்ள ‘ஷேரிட்டி’ யானையின் 40வது பிறந்தநாளைக் கொண்டாடியது

இந்த 4.2 கிலோமீட்டர் நடை, சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) மாலை மரினா பேவைச் சுற்றி நடைபெற்றது. அதில் 4,800க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, உதவி தேவைப்படும் குடும்பங்களுக்காக நிதி திரட்டினர்.

துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நடையைத் தொடங்கிவைத்தார்.

இம்மாதம் 23 முதல் 25ஆம் தேதிவரை நடைபெற்ற பத்தாவது ‘சேண்ட்ஸ் ஃபார் சிங்கப்பூர்’ அறநிறுவன விழாவுடன் இணைந்து இந்நடை நடைபெற்றது. 2011 முதல் மரினா பே சேண்ட்ஸ், சமூக உண்டியலுடன் இணைந்து இந்நடையை ஏற்பாடு செய்துவருகிறது. இம்முறை மரினா பே சேண்ட்ஸ் $200,000 நன்கொடையும் அளித்தது.

பத்துப் பெண் தொழில்முனைவர்கள் வழிநடத்தும் ‘நலனுக்காகப் பெண்கள்’ இயக்கமும் நிகழ்ச்சியில் அறிமுகம் கண்டது. இதன்வழி, தொழில்முனைவர்கள் தம் வர்த்தகச் செயல்பாடுகளில் நன்கொடைக்கான வழியையும் உட்புகுத்தி, உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கும் சிறார்களுக்கும் ஆதரவளிக்க தம் வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பர்.

எடுத்துக்காட்டாக, கட்டணம் செலுத்தும்போது நன்கொடையளித்தல், உண்மைப்பற்றுப் (Loyalty) புள்ளிகள், வெகுமதிகளை ரொக்க நன்கொடைகளாக மாற்றுதல் போன்றவற்றை அவர்கள் அறிமுகப்படுத்துவர்.

இவ்வியக்கம் சமூக உண்டியலின் ‘தொண்டுக்காக மாற்றம்’ திட்டத்தில் இடம்பெறுகிறது. 2021ல் தொடங்கப்பட்ட அத்திட்டம், 70க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர வணிகங்கள் உள்ளிட்ட 280க்கும் மேற்பட்ட வணிகங்களை உள்ளடக்கியுள்ளது.

செங்குத்து நெட்டோட்டம்

மரினா பே சேண்ட்ஸ் ‘ஸ்கைபார்க்’கில் சமூக உண்டியல் ஏற்பாடுசெய்த செங்குத்து நெட்டோட்டத்திலும் 39 நிறுவனக் குழுக்கள் பங்குபெற்றன.
மரினா பே சேண்ட்ஸ் ‘ஸ்கைபார்க்’கில் சமூக உண்டியல் ஏற்பாடுசெய்த செங்குத்து நெட்டோட்டத்திலும் 39 நிறுவனக் குழுக்கள் பங்குபெற்றன. - படம்: சமூக உண்டியல்

சனிக்கிழமை காலையில் மரினா பே சேண்ட்ஸ் ‘ஸ்கைபார்க்’கில் சமூக உண்டியல் ஏற்பாடுசெய்த 57-மாடி செங்குத்து நெட்டோட்டத்திலும் 39 நிறுவனக் குழுக்கள் பங்குபெற்றன.

அதில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா (வலம்) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா (வலம்) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். - படம்: சமூக உண்டியல்
நடையில் பங்குபெற்ற சில இந்தியர்கள்.
நடையில் பங்குபெற்ற சில இந்தியர்கள். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்