11வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு நவம்பர் 15 முதல் 17ஆம் தேதிவரை கோலாலம்பூர் மாநாட்டு நிலையத்தில் நடைபெற உள்ளது. பெரும்பாலும் சென்னையில் நடைபெறும் இம்மாநாடு மலேசியாவில் நடைபெறுவது இது முதல் முறை.
2009லிருந்து அனைத்துலக அளவில், தொழில்துறைத் தலைவர்களிடத்தில் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திவருகிறது இம்மாநாடு. இதற்கு, சென்னை வளர்ச்சிக் கழகமும் (Madras Development Society) உலகத் தமிழர் பொருளாதார நிறுவனமும் (World Tamils Economic Foundation) இணைந்து ஏற்பாடு செய்கின்றன.
எதிர்வரும் மாநாட்டை சிங்கப்பூர் சார்பில் சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தகத் தொழிற்சபை (SSACCI) ஒருங்கிணைக்கிறது. மாநாட்டில் கலந்துகொள்ள https://tinyurl.com/11thWTEC என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்யலாம்.
மாநாட்டின் அங்கங்கள்
பல நாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவர்கள், ஆய்வாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தகத் தொழிற்சபையினர், லாப நோக்கற்ற அமைப்பினர் உரையாற்றுவர். மூன்று நாள் வர்த்தகக் கண்காட்சியும் இடம்பெறும்.
ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்க விரும்புவோர் தங்கள் கட்டுரையின் சுருக்கத்தை அக்டோபர் 30ஆம் தேதிக்குள் மின்னஞ்சல்வழி அனுப்பவேண்டும்.
பண்பாட்டு நிகழ்ச்சியில் பங்குபெற, அக்டோபர் 30ஆம் தேதிக்குள் மின்னஞ்சல்வழி தெரிவிக்கவேண்டும்.
தங்கள் வர்த்தகத்தைப் பற்றி ஒரு மணி நேரத்திற்குப் படைக்க ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். அதற்கு நவம்பர் 10ஆம் தேதிக்குள் மின்னஞ்சல்வழி விண்ணப்பிக்கவேண்டும். மின்னஞ்சல் முகவரி mds_1981@yahoo.com.
ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகத் தமிழர் மாமணி விருது இவ்வாண்டும் வழங்கப்படும். முன்மொழியும் தேதி கடந்துவிட்டது. சிங்கப்பூரிலிருந்து சில முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மேல்விவரங்களுக்கு https://economic-conference.com/ இணையத்தளத்தை நாடலாம். Dr.chinnu@ssacci.org மின்னஞ்சல் முகவரியில்/ 91056755 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

